முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உண்டியலில் பக்தர்கள் செலுத்திய ரூ.20 கோடி நாணயங்கள் வங்கியில் செலுத்தப்படும்: திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதியில் உள்ள தேவஸ்தான விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 73-வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் தேசியக் கொடி ஏற்றிவைத்து, கண்காணிப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசும் போது,

திருமலையில் ரூ.15.48 கோடியில் மேலும் 1,050 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் உண்டியலில் செலுத்திய ரூ. 20 கோடி நாணயங் கள் விரைவில் வங்கியில் செலுத்தப்படும். விசாகப்பட்டினத்தில் ரூ.17 கோடியில் ஏழுமலையான் கோயில் கட்டப்படும். செப்டம்பர் 30-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை வருடாந்திர பிரம் மோற்சவ விழா நடத்தப்படும். ரூ. 96 கோடியில் திருமலையில் ஸ்ரீவாரி சேவா பவன் கட்டப்பட்டது. இது போன்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் சேவை யில் தம்மை முழுமையாக ஈடுபடுத் திக்கொண்டுள்ளது என்றார்.

இதையடுத்து சிறந்த பணியாளர்களுக்கு அனில்குமார் சிங்கால் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். நிகழ்ச்சியில் தேவஸ்தான பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், குதிரை, மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து