பிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2019      அரசியல்
sasi tharoor 2018 01-26

பிரதமர் மோடியின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்கக் கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற டாக் ஜெர்னலிசம் என்னும் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற சசிதரூர் பேசியதாவது,

கட்சியின் தலைவர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அது தொண்டர்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கும். ஆனால் தற்போது சோனியா காந்திக்கு இடைக்கால தலைவர் எனும் கவசத்தை காங்கிரஸ் காரிய கமிட்டியினர் வழங்கி உள்ளனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து முதலீடுகளை திரும்ப எடுத்து கொண்டிருக்கின்றனர். நாட்டில் நிலவும் நிச்சயமற்ற தன்மையே இதற்கு காரணம் என்று தெரிவித்தார். 

இதை தொடர்ந்து பசுவின் பெயரால் நடக்கும் தாக்குதலால் சமூக நல்லிணக்கம் தேய்ந்து வரும் நாட்டில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் விரும்பவில்லை என்றும் சசிதரூர் கூறினார். தொடர்ந்து பிரதமர் மோடி குறித்து பேசிய அவர் எதற்கெடுத்தாலும் மோடியை விமர்சிக்க கூடாது. எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான விமர்சனங்களில் ஈடுபட வேண்டும். மேலும் மோடி மீண்டும் ஆட்சியை பிடிக்க எது காரணம் என நாம் சிந்திக்க வேண்டும். சுவாஜ் பாரத், உஜ்வாலா யோஜனா போன்ற திட்டங்கள் உண்மையிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்றுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து