இலங்கை புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார்: அமெரிக்க அரசு

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019      உலகம்
SL president-US Govt 2019 11 19

வாஷிங்டன் : இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு அமெரிக்க அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அரசாங்க செயலாளர் மைக் பாம்பியோ கூறியதாவது;-

இலங்கை மக்களுக்கும், புதிய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவுக்கும் அமெரிக்க அரசாங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அவருடன் இணைந்து பணியாற்றவும் தயாராக உள்ளது. இலங்கையில் பாதுகாப்பு துறையில் சீர்திருத்தம், நம்பகத்தன்மை, மனித உரிமை மற்றும் மீண்டும் நிகழக்கூடாத வன்முறை ஆகியவற்றை கோத்தபய ராஜபக்சே கருத்தில் கொள்வார் என நாங்கள் நம்புகிறோம். மேலும் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற்றுள்ள இலங்கை தேர்தல் மூலமாக இலங்கையில் ஜனநாயகத்தின் வலிமை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது ராணுவ தளபதியாக செயல்பட்ட கோத்தபய ராஜபக்சே, தற்போது அந்நாட்டின் 7-வது ஜனாதிபதியாக பதிவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து