முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா போருக்கு தயாராகும் புகைப்படங்கள் வெளியானது

புதன்கிழமை, 27 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சீனா போருக்கு தயாராகும் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா நெருக்கடியில் உலகம் சிக்கி தவிக்கும் போது சீனா போருக்கு தயாராகும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.  செயற்கைகோளில் இருந்து எடுக்கப்பட்ட மூன்று புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சீனாவின் போன்காங்காக் ஏரியில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சீனாவின் ராணுவ விமான தளம் விரிவு படுத்தப்பட்டுள்ளதை காணலாம்.

முன்னதாக கடந்த மே 5, மற்றும் மே 6-ம் தேதிகளில் இந்தியா சீனா எல்லையில் பதற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படங்கள் முதலில் ஏப்ரல் 6, 2020ல் திபெத்தில் உள்ள நகரி குன்சா விமான நிலையத்தை காட்டுகிறது. இரண்டாவது மே 21-ல் ஏதோ விரிவுபடுத்தும் கட்டுமான பணிகள் நடப்பதை காண முடிகிறது.

மூன்றாவது படத்தில், ராணுவ விமானங்கள் மற்றும், ஆயுதங்கள் ஏற்றும் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. முன்னதாக இந்தியா சீனாவிடையே 1999-ல் ஏற்பட்ட கார்கில் போரில் பல வீரர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. அது போல் மீண்டும் ஒரு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து