முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

25-ம் தேதி சோனியாவை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி

வியாழக்கிழமை, 15 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: திரிணாமுல்  காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வரும் 25-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மம்தா டெல்லிக்குச் செல்வது இது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மம்தா பானர்ஜி தனது டெல்லி பயணத்தின் போது சோனியாவை மட்டுமல்லாது மற்ற ஒருமித்த கொள்கை கொண்ட கட்சியினரையும் சந்திப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை, எகிறும் விலைவாசி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசு ஒன்றிணைந்து எதிர்ப்பது குறித்து இந்த சந்திப்பின் போது மம்தா சோனியாவுடன் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து