முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவிஞர் சினேகன்-கன்னிகா திருமணம் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 29 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் சினேகன்-கன்னிகா திருமணத்தை கமல்ஹாசன் நடத்தி வைத்தார்.

பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் சினேகன்.  700-க்கும் மேற்பட்ட படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். 

தற்போது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.  சினேகன் தொலைக்காட்சி நடிகை கன்னிகாவை காதலித்து வந்தார்.  சினேகன், கன்னிகா இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்துவந்தனர். 

இந்த நிலையில் நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சென்னையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் நடந்த இத்திருமணத்தை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தலைமையேற்று நடத்திவைத்தார்.

திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் திருமண நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு சினேகன் - கன்னிகா தம்பதிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். 'தேவராட்டம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கன்னிகா, தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து