வடக்கு மத்திய பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு மோசம் சிவராஜ் சிங் சவுகான் தகவல்

Shivraj-Singh 2021 08 04

Source: provided

போபால்: வடக்கு மத்திய பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு மோசமாக உள்ளது என்று அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். 

தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த சில நாள்களாக மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்து வந்த நிலையில், வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில், பேரிடர் மீட்புக் குழுக்கள், ராணுவம் மற்றும் விமானப்படை ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது, 

வடக்கு மத்தியப் பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு மோசமாக உள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் 240 கிராமங்களிலிருந்து 5,950 பேரை மீட்டுள்ளனர். மேலும் 1,950 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமானப்படையின் ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் 1,950 பேரை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மழை குறைந்து வருவதால், சாலைகளில் தேங்கிய வெள்ளநீரும் குறைகிறது. இந்த வெள்ள பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமருடன் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து