முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை ஒரே நாளில் ஓணம், வரலட்சுமி பூஜை: பூக்களின் விலை உயர்வு

வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

சென்னை: தமிழகத்தில் வரலட்சுமி பூஜை, கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று மதுரை மல்லிகை விலை கிலோ ரூ.2,000-க்கு விற்பனையானது.

கேரளாவில் ஓணம் பண்டிகை நாளை 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அங்கு விழா களைகட்டத் தொடங்கி இருக்கிறது. ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமாக அத்தப்பூ கோலம் போடப்படுவது வழக்கம். இதற்காக ஓசூர், மதுரை, திண்டுக்கல் நிலக்கோட்டை, கோவை, தோவாளை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய மலர்ச் சந்தைகளில் இருந்து அதிக அளவில் பூக்கள் கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டத்துடன், இன்று வரலட்சுமி பூஜை தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. மேலும், ஆவணியில் முக்கிய முகூர்த்த நாட்களும் தொடங்கி விட்டதால் அனைத்து வகைப் பூக்கள் விலையும் உயர்ந்து விட்டது.

மதுரை மாட்டுத்தாவணி மலர்ச் சந்தை நேற்று நீண்டகாலத்திற்குப் பிறகு களைகட்ட ஆரம்பித்தது. உள்ளூர் மக்கள் பூக்கள் வாங்கத் திரண்டனர். அதுபோல், கேரளா மற்றும் உள்ளூர் வியாபாரிகள், ஓணம் பண்டிகைக்குத் தேவையான பூக்களை வாங்கத் திரண்டனர். அதனால், பூக்களின் விலை வழக்கத்தை விட அதிகரித்தது.

மதுரை மல்லிகைப்பூ நேற்று ஒரே நாளில் கிலோ ரூ.2000 ஆக விலை உயர்ந்தது. அதுபோல், கனகாரம்பரம் கிலோ ரூ.700, சம்பங்கி ரூ.400, முல்லைப்பூ ரூ.800, பிச்சிப்பூ ரூ.700, செவ்வந்தி 150, பட்டன் ரோஸ் ரூ.220, தாழம்பூ ஒன்று ரூ.650 என மற்ற பூக்களின் விலையும் உயர்ந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து