முக்கிய செய்திகள்

கண்டைனருக்குள் நடந்த ஷூட்டிங்

ஞாயிற்றுக்கிழமை, 24 அக்டோபர் 2021      சினிமா
Michael-Thangathurai 2021 1

Source: provided

LIFE GOES ON PICTURES  தயாரித்துள்ள படம் ஊமைச் செந்நாய். அர்ஜுன் ஏகலைவன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக மைக்கேல் தங்கதுரை நடிக்கிறார். கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் புகழ்பெற்ற இவர் பர்மா, நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். கதாநாயகியாக சனம் ஷெட்டி நடிக்கிறார்.

சாய் ராஜ்குமார், கஜராஜ், தெகிடி, ஜெயக்குமார்  ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு  கல்யாண் வெங்கட்ராமன், ஏ.ஆர்.ரகுமானின் கே.எம் இசைப்பள்ளி மாணவரான சிவா இந்தப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். 35 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பின் ஒரு கட்டத்தில் முழு சண்டைக் காட்சியும் கண்டைனருக்குள் படமாக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து