முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று மழை பெய்யும் இடங்கள்: வானிலை ஆய்வு மையம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று, நீலகிரி, திருச்சி, நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரையில் ஓரிரு இடங்களில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து