முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைவானை சுற்றி சீனா ராணுவ போர் பயிற்சி: பதட்டம் அதிகரிப்பு: விமான சேவைகள் பாதிப்பு

வியாழக்கிழமை, 4 ஆகஸ்ட் 2022      உலகம்
China-military-training 202

தைவானை சுற்றி சீனா ராணுவப் பயிற்சியைத் தொடங்கியிருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, சீனாவின் எதிர்ப்பயைும், மிரட்டலையும் புறந்தள்ளி விட்டு தைவான் சென்றார். இந்நிலையில், தைவானை சுற்றி சீனா ராணுவப் பயிற்சியைத் தொடங்கியிருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சீன ராணுவத்தின் இந்த போர் பயிற்சிக்காக, தைவான் தீவைச் சுற்றியுள்ள ஆறு முக்கிய பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 

இந்த காலகட்டத்தில் அனைத்து கப்பல்களும் விமானங்களும் தொடர்புடைய கடல் பகுதிகள் மற்றும் வான்வெளிக்குள் நுழையக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவானைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்திருப்பதால், சீனாவின் திட்டமிட்ட ராணுவப் பயிற்சிகள் காரணமாக தைவான் விமானங்கள் செல்லும் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன.  சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சீன இராணுவப் போர் பயிற்சி நடைபெறும் தைவானுக்கு அருகில் உள்ள ஆறு ஆபத்து மண்டலங்களை தவிர்க்குமாறு பல விமான நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இது குறித்து, தைவான் அரசு கூறுகையில், தங்கள் நாட்டின் தற்காப்பு திறன்களை வலுப்படுத்தி வருவதாகவும், அமெரிக்கா மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைப்பதாகவும் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து