முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திடீர் உடல்நலக்குறைவு: கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, தனியார் மருத்துவமனையில் அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      இந்தியா
S M Krishna 2022-09-25

Source: provided

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடுமையான சுவாசக்குழாய் தொற்று காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு வருவதாகவும், தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம். கிருஷ்ணா, 1999-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி முதல் 2004 மே 28-ம் தேதி வரை கர்நாடக முதல்வராக பதவி வகித்தார். மேலும், மகாரஷ்டிர மாநில கவர்னராகவும்,  வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து