முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 96 குறைந்தது

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2023      வர்த்தகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ. 12-ம் பவுனுக்கு ரூ. 96-ம் குறைந்துள்ளது.

சென்னையில் புத்தாண்டு பிறந்ததில் இருந்து தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது.  கடந்த மாதம் பவுன் ரூ. 39 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ. 42 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

இந்த சூழ்நிலையில் நேற்று தங்கம் கிராமுக்கு ரூ. 12-ம் பவுனுக்கு ரூ. 96-ம் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் கிராம் ரூ. 5317-க்கு விற்பனை ஆனது. நேற்று இது ரூ. 5,305-ஆக குறைந்துள்ளது. பவுன் ரூ. 42,536-ல் இருந்து ரூ. 42,440-ஆக குறைந்து இருக்கிறது. இதே போல வெள்ளி விலையும் குறைந்து இருக்கிறது. கிராம் ரூ.75.80-ல் இருந்து ரூ.75.30 ஆகவும், கிலோ ரூ.75,800-ல் இருந்து ரூ. 75,300 ஆகவும் குறைந்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து