முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்கலைக்கழக படிப்பில் சேர எகிப்துக்கு சைக்கிளில் சென்ற கினியாவை சேர்ந்த வாலிபர்

சனிக்கிழமை, 23 செப்டம்பர் 2023      உலகம்
Egypt 2023-09-23

Source: provided

கெய்ரோ : பல்கலைக்கழக படிப்பில் சேர கினியாவை சேர்ந்த வாலிபர் எகிப்து நாட்டிற்கு சைக்கிளில் பயணம் செய்து தான் விரும்பிய படிப்பில் சேர்ந்துள்ளார். 

மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியாவை சேர்ந்தவர் மமதோ சபாயு பாரி. 25 வயதான இவருக்கு எகிப்தில் உள்ள புகழ்பெற்ற அல் அசார் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. 

இந்த பல்கலைக் கழகத்தில் சேருவதற்காக அவர் எகிப்துக்கு விமானத்தில் செல்ல பணம் இல்லாமல் தவித்தார். எனினும் தனது கனவை நிறைவேற்றுவதற்காக கடந்த மே மாதமே சைக்கிளில் எகிப்துக்கு பயணத்தை தொடங்கி உள்ளார். 

அங்கிருந்து மாலி, புர்கினா பாசோ, நைஜர், டோகோ, பெனின் உள்ளிட்ட நாடுகளை கடந்த போது 3 முறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் கல்வி பயில்வதற்காக சைக்கிளில் சென்றதை விளக்கியதை தொடர்ந்து போலீசார் அவரை விடுவித்துள்ளனர். 

பின்னர் அவரது கல்வி ஆர்வத்தை அறிந்து சிலர் உதவிகள் செய்துள்ளனர். மேலும் நிதி திரட்டி எகிப்துக்கு விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து சூடானில் இருந்து கடந்த 5-ம் தேதி அல்அசார் பல்கலைக் கழகத்திற்கு சென்ற அவருக்கு  விரும்பிய படிப்பில் சேர அனுமதி கிடைத்ததோடு அதற்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து