எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து சீனாவில் தற்போது புதிய வகை நிமோனியா காய்ச்சல் என்பது வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் போன்றவற்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக பரவக்கூடிய புதிய தொற்றானது குழந்தைகளையும், முதியவர்களையும் அதிகமாக பாதிக்கும் என்று கருதப்படுவதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது, போதுமான ஆக்சிஜன் கையிருப்பு, முக கவசம், அவசரகால மருந்துகள் கையிருப்பு வைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றது. நிமோனியா நோய் தொற்று குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |