முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இனி புத்தகத்தை பார்த்தே தேர்வுகள் எழுதலாம் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் விரைவில் நடைமுறை

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2024      இந்தியா
School 2023 04 07

Source: provided

புதுடெல்லி:சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) கீழ் நாடுமுழுவதும் 29,009 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.  இந்த பள்ளிகளில் சுமார் 2.6 கோடி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  இதற்கிடையே, தேசியக் கல்விக் கொள்கை-2020 அடிப்படையில் பாடத்திட்டம், தேர்வு முறை உட்பட பல்வேறு மாற்றங்களை சி.பி.எஸ்.இ. வாரியம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் 9 முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையைக் (ஓபிஇ) கொண்டு வருவதற்கு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9,10-ம் வகுப்புகளுக்கான ஆங்கிலம், கணிதம்,  அறிவியல் பாடங்களுக்கும்,  11, 12-ம் வகுப்புகளுக்கான ஆங்கிலம், கணிதம்,  உயிரியல் பாடங்களுக்கும் புத்தகம் பார்த்துதேர்வு எழுதும் நடைமுறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னை,  டெல்லி உள்ளிட்ட நகரங்களில் சில பள்ளிகளில் சோதனை அடிப்படையில் இந்த தேர்வுகளை நவம்பர்,  டிசம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த சோதனை முறைக்குப் பின் பெறப்படும் கருத்துகள்,  பகுப்பாய்வுகள் ஆகியவற்றைக் கொண்டு இத்திட்டம் அமல்படுத்தப்படும்.  கொரோனா காலத்தில் புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையைக் கொண்டு வந்த டெல்லி பல்கலைக்கழகத்திடமும் வாரியம் ஆலோசனை கேட்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து