முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      உலகம்
Kashmir 2024-06-10

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள பிரபல கோவிலான சிவகோடி குகைக் கோவிலுக்குச் செல்வதற்காக பஸ்சில் பக்தர்கள் சென்றுகொண்டிருந்தனர். பஸ் ரியாசி மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களை உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து