முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உளவு துறை எச்சரிக்கை: டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2024      இந்தியா
Delhi 2024 08 03

Source: provided

புதுடெல்லி : ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட நிலையில் உளவுத் துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம், சாபாத் ஹவுசின் பாதுகாப்பினை காவல்துறை பலப்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள இரண்டு இஸ்ரேலிய கட்டிடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பினை உறுதி செய்வது குறித்து நடந்த மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் ஏற்கெனவே அந்தப் பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

அந்த இரண்டு கட்டிடங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் ஆட்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கடந்த மூன்று ஆண்டுகளில், டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே இரண்டு குறைந்த வீரியம் கொண்டு குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இந்த இரண்டு தாக்குதல்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதனிடையே, ஜுலை 31-ம் தேதி ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, அவருடைய பாதுகாவலருடன் வான்வழி தாக்குல் மூலம் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் டெக்ரானில் உள்ள ஹனியேவின் வீட்டில் நடத்தப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இஸ்ரேல் - ஹமாஸ்களுக்கு இடையே போர் மூண்டதை தொடர்ந்து டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து