முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்?

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
Dravid 2024-01-29

Source: provided

லண்டன் : இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பதவியின் இருந்து மேத்யூ மோட் விலகியுள்ள நிலையில்  இங்கிலாந்து அணியின் தலைமை  பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்க இயான் மோர்கன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்தியா சாம்பியன்...

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பதவியின் இருந்து மேத்யூ மோட் விலகியதை அடுத்து, அப்பதவிக்கு ராகுல் டிராவிட்டை நியமிக்கலாம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நான் நம்புகிறேன்.... 

ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த இயான் மோர்கன், "என் பார்வையில், இந்த நேரத்தில், இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோரிடம் நீங்கள் செல்வீர்கள் என்று நான் நம்புகிறேன். அதிலும் குறிப்பாக மெக்கல்லம் என்று நான் சொல்கிறேன். ஏனென்றால் அவர் உலகின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து