எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கோலாலம்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 4-வது சுற்றைத் தொடர்ந்து 5-வது சுற்றும் டிராவில் முடிவடைந்த நிலையில் இன்று நடைபெறும் 6-வது சுற்றில் குகேஷ்-லிரென் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதுவரை இருவரும் தலா 2.5 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் சமமாக உள்ளனர்.
4-வது சுற்றும்...
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனும், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்திய வீரர் குகேஷும் விளையாடி வருகின்றனர். 14 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதலில் 7.5 புள்ளிகள் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்தத் தொடரின் முதல் சுற்றில் குகேஷ் தோல்வியடைந்தார். இரண்டாவது சுற்று டிராவிலும், மூன்றாவது சுற்றில் குகேஷ் வெற்றியும் பெற்றிருந்தார். நேற்று முன்தினம் (நவ. 29) நடைபெற்ற 4-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. தொடர்ந்து, நேற்று நடைபெற்ற 5-வது சுற்றும் டிராவில் முடிவடைந்துள்ளது.
லிரெனுக்கு ஏமாற்றம்...
40 நகர்வுகளின் முடிவில் டிரா செய்யப்பட்ட 5-வது ஆட்டம்.40 நகர்வுகளின் முடிவில் டிரா செய்யப்பட்ட 5-வது ஆட்டம். ஆட்டத்தின் போது ஒரு நகர்த்தலில் குகேஷ் தனது யானையை (ரூக்) வைத்து லிரெனின் மந்திரியை (பிஷப்) வெட்டாமல் சிப்பாயை (பான்) வைத்து வெட்டினார். இது லிரெனுக்கு சாதகமாக மாறியது. ஆனால், அடுத்தடுத்த நகர்வுகளில் சமயோசிதமான முறையில் விளையாடிய குகேஷ் ஆட்டத்தை டிராவுக்கு கொண்டு சென்றார். இதில் லிரென் சற்றே ஏமாற்றமடைந்தார். 40 நகர்வுகளில் ஆட்டம் முடிவடைந்தது.
இது முதல்முறை...
இந்தத் தொடரில் குகேஷ் வெள்ளைக் காய்களில் விளையாடி டிரா செய்தது இது முதல்முறை. ஐந்து போட்டிகளின் முடிவில் இருவரும் தலா 2.5 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் சமமாக உள்ளனர். 6-வது போட்டி இன்று (டிச. 1) நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 2.30 மணியளவில் நேரலை ஒளிபரப்பாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


