முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவுக்கான அமெரிக்க தூதராக டேவிட் பெர்டியூ நியமனம்: டிரம்ப்

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024      உலகம்
America 2024-12-08

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாண முன்னாள் செனட் உறுப்பினரான டேவிட் பெர்டியூவை, சீனாவுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் நியமித்து உள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 5-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி, குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். 

இதனை தொடர்ந்து, பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை அவர் நியமித்து வருகிறார்.  இதன்படி, அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாண முன்னாள் செனட் உறுப்பினரான டேவிட் பெர்டியூவை, சீனாவுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் நியமித்து உள்ளார்.

இது பற்றி டிரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

பார்ச்சூன் 500-ன் தலைமை செயல் அதிகாரி, 40 வருடம் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டவர். அமெரிக்க செனட்டராக பணியாற்றியவர் டேவிட்.  சீனாவுடனான நம்முடைய உறவை கட்டியெழுப்ப மதிப்புமிக்க நிபுணத்துவத்துடன் செயல்படுவார்.

சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் வசித்திருக்கிறார்.  தொழிலின் பெரும் பகுதியாக ஆசியா மற்றும் சீனாவில் அவர் பணியாற்றி இருக்கிறார் என தெரிவித்து உள்ளார்.  

சீன தலைவர்களுடன் ஆக்கப்பூர்வ செயல்பாட்டுக்கான உறவை ஏற்படுத்தவும், அந்த பகுதியில் அமைதியை பராமரிப்பதற்கான என்னுடைய செயல் திட்டம் அமல்படுத்தப்படவும் துணை புரிவார் என்றும் டிரம்ப் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து