முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிராவில் சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் : பா.ஜ.க.வின் நர்வேகர் வேட்புமனு தாக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024      இந்தியா
Maharashtra-2024-12-08

Source: provided

மும்பை : மகராஷ்டிராவின் சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடக்க இருக்கிறது.  சபாநாயகர் பதவிக்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராகுல் நர்வேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த சட்டப்பேரவையிலும் நர்வேகரே சபாநாயகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நர்வேகர் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார், மாநில பா.ஜ.க. தலைவர் சந்திரசேகர பவன்குலே, மூத்த பா.ஜ.க. தலைவர் சந்திரகாந்த் பாடீல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மகராஷ்டிராவின் சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் இதுவரை வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், கோலாபா தொகுதி எம்எல்ஏ ராகுல் நர்வேகர் போட்டியின்றி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.

 இதனிடையே, நர்வேகரின் வேட்புமனு தாக்கலைத் தொடர்ந்து துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சி கூட்டணி கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று கோரி, மகாவிகாஸ் அகாடி கூட்டணித் தலைவர்கள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை நேற்று சந்தித்தனர்.

அவர்கள் முதல்வர் பட்னாவிஸிடம், எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவை சபாநாயகரை போட்டியின்றித் தேர்வுசெய்ய எதிர்க்கட்சிகள் அனுமதிக்கும். ஆனால், ஆளுங்கட்சி மரபுகளைப் பின்பற்றி துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.

முதல்வரைச் சந்தித்த சிவசேனா (உத்தவ் அணி), காங்கிரஸ், என்சிபி (எஸ்பி) அங்கிய மகா விகாஸ் அகாதி குழுவுக்கு சிவசேனாவைச் சேர்ந்த பாஸ்கர் ஜாதேவ் தலைமை வகித்தார். முதல்வருடனான சந்திப்புக்கு பின்பு, சட்டப்பேரவையில் கூட்டணியின் செயல்பாடுக்கான அடிப்படைகளை வகுப்பது குறித்து விவாதிக்க மகாவிகாஸ் அகாடி கூட்டணித் தலைவர்களின் கூட்டம் நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து