முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய செயலாளர், பொருளாளர்

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

மும்பை : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளராக இருந்த ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பேற்றார். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய செயலாளரை நியமிக்க வேண்டியிருந்தது. கிரிக்கெட் வாரிய விதிப்படி இந்த பதவியை 45 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும்.

பொருளாளர் பதவி...

இதனிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால செயலாளராக தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டார். சைகியா இதற்கு முன்னர் இணை செயலாளர் பதவியில் இருந்தார். இதனையடுத்து நிரந்தர செயலாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் பி.சி.சி.ஐ. நிர்வாகக்குழு இறங்கியது.

மேலும் பொருளாளர் பதவியும் காலியாக இருந்தது. இந்த பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால் அவர்கள் போட்டியின்றி தேர்வானார்கள். அதன்படி செயலாளராக தேவஜித் சைகியாவும், பொருளாளராக பிரப்தேஜ் சிங் பாட்டியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து