முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டன் மருத்துவமனையில் இந்திய செவிலியருக்கு கத்திக்குத்து

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      உலகம்
Kattikkuttu

பிரிட்டன், பிரிட்டன் மருத்துவமனையில் கத்திக்குத்துக்கு உள்ளான இந்திய செவிலியர் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்.

பிரிட்டனில் உள்ள ராயல் ஓல்தம் மருத்துவமனையில் பணியில் இருந்த இந்திய செவிலியர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அச்சம்மா செரியன் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் செவிலியர், இரவுப் பணியில் இருந்தபோது, ரூமோன் ஹாக் என்பவரால் கத்திக்குத்துக்கு ஆளானார். 50 வயதாகும் பெண் செவிலியர் உடலில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் அவருக்கு தொடர்ந்து உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது உடலில் ஏற்பட்டிருக்கும் காயங்கள், உயிருக்கு ஆபத்தானவையாக இருப்பதாகவும் காவலர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்திருக்கிறார். தற்போது, செவிலியரின் உயிர் காக்கும் சிகிச்சைகள் கிடைப்பதிலேயே எங்களது முழு கவனமும் இருக்கிறது. அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், அவருடன் பணியாற்றும் செவிலியர்களுக்கும் எங்களது சார்பில் ஆதரவு அளிக்கப்படுகிறது என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து