முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் உண்மை நிலையை புரிந்து கொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: ராகுல் காந்தி

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      இந்தியா
Rahul 2024-06-10

Source: provided

புதுடெல்லி : நாட்டின் உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பிகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடைபெற்ற 'அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் (சம்விதன் சுரக்ஷா சம்மேளனம்) கலந்துகொண்டு பேசினார். மத்திய பாஜக அரசைவும் ஆர்எஸ்எஸ்ஸையும் அவர் விமரிசித்துப் பேசினார். 'பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலித்துகள் பிரதிநிதித்துவத்தைப் பெறுகிறார்கள் என்பதை அவர்கள்(பாஜக) அறிந்ததும் அவர்கள் அதிகாரத்தைப் பறித்தார்கள்.

மத்திய பாஜக ஆட்சியில் அம்பானி, அதானி, ஆர்.எஸ்.எஸ்-க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒவ்வொரு அமைப்பிலும் தங்கள் ஆள்களை வைத்திருக்க நினைக்கிறார்கள். நாட்டின் உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். பிகாரில் நடத்தப்பட்ட போலி சாதிவாரி கணக்கெடுப்புப்போல இது இருக்கக்கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒரு கொள்கை வகுக்கப்பட வேண்டும். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நிறைவேற்றுவோம். 50 சதவீதம் இடஒதுக்கீடு என்ற தடையை நாங்கள் தகர்ப்போம்' என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து