எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் உலக சாம்பியன் குகேஷ் முதல் சுற்றில் வெற்றி பெற்று அசத்தினார். முதல் சுற்றில் ஹாலந்தை சேர்ந்த அனிஷ் கிரியை எதிர்கொண்டு விளையாடிய குகேஷ் கடினமாக சென்ற போட்டியில் கடைசி நேரத்தில் வெற்றியை பதிவு செய்தார்.
வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் ஆரம்பத்தில் இருந்து பின்தங்கினார். துவக்கம் முதலே அனிஷ் கிரி சிறப்பாக காய்களை நகர்த்தினார். போட்டியின் 33-வது நகர்த்தலில் சிறு தவறு செய்ய, குகேஷ் தோல்வியை தழுவ இருந்தார். பின்னர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட குகேஷ் 42-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். முதல் சுற்றில் நடந்த மற்றொரு போட்டியில் இந்திய வீரர்களான பி. ஹரிகிருஷ்ணா மற்றும் உலகின் நான்காம் நிலை வீரர் அர்ஜுன் எரிகைசியை எதிர்கொண்டு விளையாடினார். இந்தப் போட்டியில் ஹரிகிருஷ்ணா வெற்றி பெற்றார்.
______________________________________________________________________________________________
முகமது ரிஸ்வான் சாதனை
டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் புதிய சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 127 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 100 கேட்ச்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனைப் பட்டியலில் முகமது ரிஸ்வான் இணைந்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் அவர் இரண்டு கேட்ச்சுகளை பிடித்தார். இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ரிஸ்வான் 101 கேட்ச்சுகளைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
______________________________________________________________________________________________
விஜய் ஹசாரே: கர்நாடகம் சாம்பியன்
விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வதோதராவில் நேற்று நடைபெற்றது. விதர்பா மற்றும் கர்நாடகத்துக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் விளையாடிய கர்நாடகம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சமரன் ரவிச்சந்திரன் சதம் விளாசி அசத்தினார். அவர் 92 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். அபினவ் மனோகர் 42 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். கிருஷ்ணன் ஸ்ரீஜித் 78 ரன்கள் எடுத்தார். விதர்பா தரப்பில் தர்ஷன் நல்கண்டே மற்றும் நச்சிகட் பூட்டே தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். யஷ் தாக்குர் மற்றும் யஷ் கடம் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விதர்பா களமிறங்கியது. விதர்பா அணி 48.2 ஓவர்களின் முடிவில் 312 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் துருவ் ஷோரே 111 பந்துகளில் 110 ரன்கள் குவித்தார். கர்நாடகம் தரப்பில் பிரசித் கிருஷ்ணா, வாசுகி கௌசிக் மற்றும் அபிலாஷ் ஷெட்டி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இறுதியில், 36 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பாவை வீழ்த்தி கர்நாடகம் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சமரன் ரவிச்சந்திரன் ஆட்ட நாயகனாகவும், கருண் நாயர் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
______________________________________________________________________________________________
மனு பாக்கர் உறவினர்கள் பலி
ஹரியாணாவில் ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கரின் தாய்வழி பாட்டி சாவித்ரி தேவியும், மாமா யுத்வீர் சிங்கும் நேற்று சர்க்கி தாத்ரியில் உள்ள மகேந்திரகர் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது, தவறான பாதையில் வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து யுத்வீர் சிங் வாகனத்தின் மீது மோதியது. கார் மோதியதில், யுத்வீர் சிங்கும் சாவித்ரி தேவியும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதனையடுத்து, உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய ஓட்டுநரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருப்பதாக உதவி துணை ஆய்வாளர் சுரேஷ் குமார் கூறினார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாக்கருக்கு வெள்ளிக்கிழமை தான் குடியரசுத் தலைவர் மாளிகையில் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆரவாரம் முடிவதற்குள்ளாகவே மனு பாக்கரின் குடும்பத்தார் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக சமூக ஊடகங்களில் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
______________________________________________________________________________________________
சாம்சன் குறித்த வீடியோ வைரல்
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 கிரிக்கெட்டில் மிக சிறப்பாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாதது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு சஞ்சு சாம்சனை பாராட்டி இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் பேசிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், "சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக விளையாடவில்லை என்றால், அது சஞ்சு சாம்சனுக்கு இழப்பு அல்ல என்பது உங்களுக்கு தெரியும். உண்மையில் அது இந்திய அணிக்கு தான் இழப்பு. ரோகித், கோலிக்கு ஆதரவு அளிப்பதை போல சஞ்சு சாம்சனுக்கும் நாம் ஆதரவளிக்க வேண்டும். எதிர்காலத்தில் நம்பர் 1 பேட்டராக இருக்கும் திறமையை நீங்கள் இழக்கிறீர்கள்" என்று கம்பீர் பேசியுள்ளார்.
______________________________________________________________________________________________
ரஞ்சியில் விளையாடும் ஜடேஜா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்கள் பலரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்து, அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதை பிசிசிஐ கட்டாயமாக்கியது. வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு உள்ளூர் போட்டிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் ரஞ்சி கோப்பையில் விளையாடுவதை உறுதிப்படுத்தியுள்ளார். இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோரும் ரஞ்சி கோப்பையில் தங்களது அணிக்காக விளையாடவுள்ளனர்.
அவர்களது வரிசையில் தற்போது ரவீந்திர ஜடேஜாவும் இணைந்துள்ளார். ஜடேஜா விளையாடுவது குறித்து சௌராஷ்டிர கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெயதேவ் ஷா தெரிவித்ததாவது: ரவீந்திர ஜடேஜா இன்று வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். அவர் அடுத்தப் போட்டியில் விளையாடுவார் எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
பீகார் தேர்தலில் தொகுதிப் பங்கீடு: ஆர்.ஜே.டி. 135, காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டி
14 Oct 2025புதுடெல்லி : பீகார் தேர்தலில் தொகுதிப் பங்கீடில் ஆர்.ஜே.டி. 135, காங். 61 இடங்களில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மனிதராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர்: சி.வி.சண்முகத்திற்கு அமைச்சர் கண்டனம்
14 Oct 2025சென்னை : மனிதராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம் என்று அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
14 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம
-
மாநில திட்டக் குழுவின் 4 அறிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
14 Oct 2025சென்னை : மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
-
சட்டசபையில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திடீர் போராட்டம்
14 Oct 2025சென்னை : சட்டசபையில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு திடீர் பரபரப்பு நிலவியது.
-
அரசுக்கு எதிராக போராட்டம்: மடகாஸ்கர் அதிபர் தப்பி ஓட்டம்
14 Oct 2025அண்டனானரீவோ, மடகாஸ்கரில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் அதிபர் தப்பி ஓடினார்.
-
ரூ.95 ஆயிரத்தை நெருங்கிய ஒரு பவுன் தங்கம் விலை : ஒரேநாளில் ரூ.1,960 உயர்வு
14 Oct 2025சென்னை : 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (அக்.14) பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்து மீண்டும் அதிர்ச்சியளித்துள்ளது.
-
சாதி பெயர்களில் மாற்றம் வேண்டும்: முதல்வரிடம் திருமாவளவன் கோரிக்கை
14 Oct 2025சென்னை : சாதி பெயர்களில் மாற்றம் வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
14 Oct 2025புதுடெல்லி : டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
அண்டை நாடுகளுடனும் மகிழ்ச்சியாக உள்ளோம்: ஆப்கன் அமைச்சர் பேச்சு
14 Oct 2025புதுடெல்லி, பாகிஸ்தானை தவிர அண்டை நாடுகளுடனும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று வெளியுறவு மந்திரி அமீர் கான் முத்தகி பேசினார்.
-
ஆந்திராவில் ரூ.1.3 லட்சம் கோடியில் ஏ.ஐ. மையம்: கூகுள் நிறுவனம் தகவல்
14 Oct 2025விசாகப்பட்டினம், ஆந்திராவில் ரூ.1.3 லட்சம் கோடியில் ஏ.ஐ. மையம் அமைக்க உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
கரூர் சம்பவம்: ஆவணங்களை சமர்ப்பித்தது எஸ்.ஐ.டி.
14 Oct 2025சென்னை : கரூர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து ஆவணங்களை சமர்ப்பித்தது எஸ்.ஐ.டி.
-
ஓட்டுநர் தேர்வு தானியங்கி மையங்கள் அமைக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து
14 Oct 2025சென்னை : தமிழ்நாட்டில் ஓட்டுநர் தேர்வு தானியங்கி மையங்கள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
கர்நாடக முதல்வர் சித்தராமையா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
14 Oct 2025பெங்களூரு : கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்
-
6 நாட்களாக நீடித்த டேங்கர் லாரி சங்கங்களின் போராட்டம் வாபஸ்
14 Oct 2025சென்னை : சென்னை ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து 6 நாட்களாக நீடிதத் டேங்கர் லாரி சங்கங்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
-
வருங்கால வைப்புநிதியில் இருந்து இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம்
14 Oct 2025புதுடெல்லி : வருங்கால வைப்புநிதியில் இருந்து இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக 'மா' விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க மாம்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
14 Oct 2025சென்னை : நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்யவும், மா விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும் மாம்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை தேவை என்று ப
-
தமிழக சட்டப்பேரவைியல் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று ஆரம்பம் : முதல் நாளில் இரங்கல் தீர்மானம் - அவை ஒத்திவைப்பு
14 Oct 2025சென்னை : தமிழ்நாடு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறுவுள்ளது.
-
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய நீர் இருப்பு
14 Oct 2025சென்னை : சென்னை குடிநீர் வழங்கும் ஏரியில் போதிய நீர் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகாராஷ்டிராவில் 60 மாவோயிஸ்டுகள் சரண்
14 Oct 2025மும்பை : மகராஷ்டிராவில் மாவோயிஸ்ட் தளபதி உள்பட 60 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.
-
ராணாவுக்கு கம்பீர் ஆதரவு
14 Oct 2025சமீபத்தில் ஆசிய கோப்பை 2025 தொடரில் மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்திய போதிலும் (54 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் இல்லை) அவர் இரண்டு அணியிலும் ஹர்ஷித் ராணா தேர்வு செய்ய
-
நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்
14 Oct 2025டெல்லி : நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிடப்படும் விளம்பரத்திற்கு சான்றிதழ் பெறுவது கட்டாயம்
14 Oct 2025பீகார், பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிடும் விளம்பரத்திற்கு சான்றிதழ் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மகாராஸ்டிராவிற்கு கடத்தி வரப்பட்ட ரூ.6 கோடி சீன பட்டாசுகள் பறிமுதல்
14 Oct 2025மும்பை : மராட்டியத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 6 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 3 பேருக்கு ஜாமீன்
14 Oct 2025சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.