முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவில் திடீர் போராட்டம்

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2025      உலகம்
Trump

Source: provided

டிரம்ப் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவில் திடீர் போராட்டம் 

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர். 

அமெரிக்காவின் நலன்களுக்காக பெரிய அளவில் மாற்றங்களை செய்யப்போவதாக கூறி ஆட்சிக்கு வந்த டொனால்டு டிரம்ப், பதவியேற்ற நாளில் இருந்தே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். வெளிநாடுகள் மீதான வரி விதிப்பு, சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் உத்தரவு, கால நிலைமாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகல், உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகல், காசாவில் இருந்து பாலஸ்தீனர்களை தற்காலிகமாக வெளியேற்றுதல் என அவரது நடவடிக்கை அனைத்தும் உலக அரங்கில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

இந்நிலையில், டிரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் போராட்டம் வெடித்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற ஒடுக்குமுறை முதல் திருநங்கை உரிமைகள் ரத்து மற்றும் காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை மாற்றும் திட்டம் வரை அனைத்து நடவடிக்கைகளுக்கும் கண்டனம் தெரிவித்து இப்பேராட்டம் நடைபெறுகிறது. பிலடெல்பியா, கலிபோர்னியா, மின்னசோட்டா, மிச்சிகன், டெக்சாஸ், விஸ்கான்சின், இண்டியானா மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள மாநிலங்களிலும் நேற்றுமுன்தினம் ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி டொனால்ட் டிரம்பைக் கண்டித்து பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்கள் எழுப்பினர். புதிய அரசாங்கத்தின் செயல்திறன் துறை தலைவர் எலான் மஸ்க், அரசின் செயல்திட்டம் 2025 ஆகியவற்றுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். கண்டன பதாகைகளுடன் பேரணியாகவும் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து