முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - காவலாளி பலி

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      இந்தியா
Fire

மும்பை, மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து  ஏற்பட்டது இதில் காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மராட்டிய மாநிலம் மும்பையின் வித்யாவிகார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 13 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் நேற்றுமுன்தினம் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், குடியிருப்பில் இருந்த அனைவரும் அலறியடித்து வெளியே ஓடினர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

மேலும், குடியிருப்புக்குள் சிக்கி இருந்த 20 பேரை பத்திரமாக மீட்டனர். தீ விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். அவர்களை  மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், சில மணிநேர போராட்டத்திற்குப்பின் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்துவந்த காவலாளி உதய் கங்கன் (வயது 45) உயிரிழந்தார். அவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து