முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்: ரேபிடோ டிரைவர் கைது

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2025      தமிழகம்
Jail

Source: provided

சென்னை : சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரேபிடோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவான்மியூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரேபிடோ பைக் டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்தனர். கடந்த 5-ம் தேதி இரவு சாலையில் நடந்து சென்ற 26 வயது பெண்ணிடம் ரேபிடோ பைக் டாக்சி டிரைவர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். தப்பியோடிய அந்த நபரை, போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் ரேபிடோ நிறுவனத்தின் உதவியுடன் தேடி வந்தனர்.

விசாரணையில் சம்பவத்தன்று ரேபிடோ பைக் டாக்சி ஓட்டியவர் வெட்டுவாங்கேணி கற்பக விநாயகர் நகரைச் சேர்ந்த திருமலை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற திருமலைக்கு தவறி விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து