முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சண்டை நிறுத்தத்தில் மூன்றாம் நபர் தலையீடு இல்லை: அமைச்சர் ஜெய்சங்கர்

வெள்ளிக்கிழமை, 23 மே 2025      இந்தியா
Jaishaker 2024-12-03

Source: provided

புதுடெல்லி: சண்டையை நிறுத்த எடுத்த முடிவு, இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடியாக பேசி எடுக்கப்பட்ட முடிவு என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், நெதர்லாந்து உள்பட 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ஒரு செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி வருவதற்கு அவர் பதில் அளித்தார். 

இது குறித்து ஜெய்சங்கர் கூறியதாவது:- "2 நாடுகள் சண்டையில் ஈடுபடும்போது, மற்ற உலக நாடுகள் பிரச்சினையை தீர்க்க முயற்சிப்பது இயல்புதான். ஆனால், சண்டையை நிறுத்த எடுத்த முடிவு, இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடியாக பேசி எடுக்கப்பட்ட முடிவு. அமெரிக்காவுக்கு மட்டுமின்றி எங்களுடன் பேசிய எல்லா நாடுகளுக்கும் சொல்லிக் கொள்கிறேன். சண்டையை நிறுத்த பாகிஸ்தான் விரும்பியது. அதை எங்களிடம் சொன்னது. அவர்களிடம் நாங்கள் பேசினோம். இதுதான் நடந்தது.

அதே சமயத்தில், பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், தக்க பதிலடி கொடுப்போம். அதனால்தான் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று சொல்லி இருக்கிறோம்." இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 7 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 8 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 9 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து