முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது ஏன்? உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

வெள்ளிக்கிழமை, 23 மே 2025      தமிழகம்
Central-government 2021 12-

Source: provided

சென்னை: தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்து உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்காததை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதி பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை நேற்றைக்கு ஒத்திவைத்தனர்.

அதன்படி நேற்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. தனது விளக்கத்தில் "புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை. மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தது.

இதற்கு தமிழக அரசு சார்பில் "ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது பெரியண்ணன் மனப்பான்மையை காட்டுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 7 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 8 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 9 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து