முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சாரத்துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை: அமைச்சர் சிவசங்கர்

வெள்ளிக்கிழமை, 23 மே 2025      இந்தியா
Sivashankar 2023-05-08

Source: provided

பெங்களூரு: எதிர்வரும் ஐந்து முதல் ஏழாண்டுகளில் மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று (மே 23) மத்திய அரசின் மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் தென் மாநிலங்களின் மின்சாரத்துறை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர்  பேசியதாவது:-

அதிவேகமான மின் தேவை வளர்ச்சி, கரியமில வாயு உமிழ்வுகள் குறித்த அதிகரித்து வரும் சிக்கல்கள் மற்றும் புதிய எரிசக்தி மூலங்களில் நிகழும் தொடர்ச்சியான தொழில்நுட்பப் புதுமைகள் ஆகியன, நமது நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பின் எதிர்காலத்திற்குப் பெரும் சவால்களை முன்வைக்கின்றன. பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்கும், மின் தொகுப்பினை கரியமிலத் தாக்கத்திலிருந்து விடுவிப்பதற்கும்  இத்துறையில் மிகப்பெரும் அளவிலான முதலீடுகள் இன்றியமையாததாகின்றன.

எதிர்வரும் ஐந்து முதல் ஏழாண்டுகளில், மின் உற்பத்தி, மின் செலுத்துகை, மின் சேமிப்பு மற்றும் மின் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான மதிப்புச் சங்கிலியிலும் சுமார் ரூ. 2 லட்சம் கோடிக்கும் மேலான முதலீடுகள் அவசியமாகின்றன. இவ்வகையில், மின் பகிர்மான நிறுவனங்களின் நிதிநிலையைச் சீரமைத்து, அவற்றின் நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு, மாநில மற்றும் மத்திய அரசுகளின் முனைப்பானதும் ஒருமுகப்படுத்தப்பட்டதுமான ஒருங்கிணைந்த பேராதரவு அவசியமாகிறது என்று தெரிவித்தார். இந்த மாநாட்டில் தமிழக மின்வாரியத்தின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 7 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 8 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 9 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து