முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘திருக்குறள்’ இசை வெளியீட்டு விழா

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      சினிமா
Thirukural-audio 2025-06-09

Source: provided

காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ’வெல்கம் பேக் காந்தி’ (Welcome Back Gandhi) என்ற பெயரிலும் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இம்மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருக்குறள் படத்தின் இயக்குனர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் பேசுகையில், 1330 குறளை வைத்துக்கொண்டு எப்படி படமாக எடுக்க முடியும்னு யோசித்த போது எங்களுக்கு முன்னுதாரணமா இருந்து கலைஞருடைய குரலோவியம். அந்த ஓவியங்களிலிருந்து எதையெல்லாம் காட்சிப்படுத்த முடியுமோ அவற்றைக்கொண்டு இப்படத்தை எடுத்துள்ளோம் என்றார். விழாவில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், 18 கீழ்க்கணக்கு நூல்களிலே, திருக்குறள் மட்டும்தான் உலகளாவிய நூற்றுக்கணக்கான மொழிகளில், மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இது மனித குலத்துக்கே பொதுவான நூல் உலக பொதுமறை அப்படித்தான் திருக்குறளை நாம் முன்னிறுத்த வேண்டியது இருக்கிறது எனாறர். இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி, இசையமைத்துள்ளார். தயாரிப்பு நிர்வாகம் - எஸ்.ஜெய்சங்கர், மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து