முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘ஜின்’ திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      சினிமா
Gin-screen-review 2025-06-0

Source: provided

மன்னர்கள் யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக அவர்களுக்கு மந்திரவாதிகள் மூலம் கொடுக்கப்பட்ட சக்தி தான் ஜின். இதில், நல்ல ஜின்களும் உண்டு. கெட்டவைகளும் உண்டு. இப்படிப்பட்ட ஜின்கள் தற்போதைய காலக்கட்டத்தில் ஒருவரிடம் இருந்தால், என்னவெல்லாம் நடக்கும் என்பது தான் கதை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் ஒருவரிடம் இருந்த ஒரு நல்ல ஜின் நாயகன் முகேன் ராவ் வசம் வருகிறது. அது வந்த பிறகு, காதல், கல்யாணம், என வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லகிறது. அதே சமயம், அவரது மனைவி சில பிரச்சனைகள் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இந்நிலையில் ஜின் பற்றிய ரகசியம் ஒன்று முகேனுக்கு தெரிய வருகிறது. அது என்ன?, அதற்கும் தன் மனைவிக்கும் ம் என்ன சம்மந்தம்?, என்பதை சொல்வது தான் ‘ஜின்’. நாயகன் முகேன் ராவ் சிரித்து சிரித்து நடித்திருக்கிறார். நாயகி பவ்யா ட்ரிகா, சில காட்சிகளில் வந்துவிட்டு கோமாவில் படுத்து விடுகிறார். இசையமைப்பாளர்கள் விவேக் மெர்வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம். எழுதி இயக்கியிருக்கும் டி.ஆர்.பாலா, ஜின் கிராபிக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு கதை நகர்த்தப்படுவது சிறுவர்களை கவரும் முயற்சியாக இருந்தாலும், தரமற்ற கிராபிக்ஸ் கதாபாத்திரம் மற்றும் அதன் செயல்பாடுகள் கதையோடு ஒட்டாமல் பயணிப்பது படத்திற்கு பலவீனமாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து