Idhayam Matrimony

ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து டி -20 தொடரையும் வென்ற இங்கிலாந்து

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      விளையாட்டு
England 2024-05-14

Source: provided

லண்டன் : மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுவதுமாக கைப்பற்றிய நிலையில், தற்போது டி20 தொடரையும் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

ஒருநாள் தொடர் ...

மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளும் டி20 தொடரில் விளையாடி வருகின்றன.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி பிரிஸ்டாலில் நேற்று முன்தினம் (ஜூன் 8) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

5 வெற்றிகள்...

இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஜோஸ் பட்லர் விலகிய பிறகு அணியின் புதிய கேப்டனாக ஹாரி ப்ரூக் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுவதுமாக கைப்பற்றிய நிலையில், தற்போது டி20 தொடரையும் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

ஹாரி ப்ரூக் அசத்தல்...

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்தது. இங்கிலாந்து அணி 8 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில், அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர் வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறது. 11 நாள்கள் இடைவெளியில் ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி இரண்டு தொடர்களை வென்று அசத்தியுள்ளது. இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூன் 10) சௌத்தாம்டானில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து