எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
'ஹால் ஆப் பேம்' என்ற புகழ்பெற்ற வீரர்களின் பட்டியலில் தோனி சேர்க்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. இது கிரிக்கெட்டில் தனது பங்களிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும், இந்த கவுரவம் வாழ்வில் எப்போதும் பசுமையான நினைவாக நிலைத்திருக்கும் என்றும் 43 வயதான தோனி கூறியுள்ளார். இந்நிலையில் ஐசிசின் ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைக்கப்பட்ட தோனிக்கு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:- 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இருந்து 2011 உலக கோப்பையை சிக்ஸர் மூலம் வென்றது வரை அனைத்தும் கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தில் பதிந்துள்ளன. அமைதியான முறையில் அணியை வழிநடத்தி இந்திய கிரிக்கெட்டுக்கு பொற்காலத்தை வழங்கிய எம்.எஸ். தோனிக்கு பொருத்தமான மரியாதை என எடப்பாடி கூறினார்.
2-வது டெஸ்ட் டிரா: தொடர் சமன்
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா ஏ கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனையடுத்து இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி போட்டி நார்த்தம்டானில் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்திய ஏ அணி 348 ரன்னும், இங்கிலாந்து லயன்ஸ் 327 ரன்னும் எடுத்தன. அடுத்து 21 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய ஏ அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 417 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.
பின்னர் 439 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 11 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 32 ரன்கள் அடித்திருந்த போது, ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. கம்போஜ் 2 விக்கெட்டுகளும், துஷார் தேஷ்பாண்டே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது.
வாக்குவாதம்: அஸ்வினுக்கு அபராதம்
9-வது டி.என்.பி.எல். தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 16.2 ஓவர்களில் 93 ரன்களில் சுருண்டது. அடுத்து களம் இறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 11.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது.
இந்த ஆட்டத்தில் இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 18 ரன்களில் சாய் கிஷோர் பந்துவீச்சில் எல்.பி.டபிள்.யூ. ஆனார். ஆனால் பந்து லெப்ட் சைடுக்கு வெளியே பிட்ச் ஆகி அஸ்வினின் காலில் படுவதுபோல் தெரிந்தது. இதற்கு அவுட் தர மாட்டார்கள் என அஸ்வின் நினைக்க, களத்தில் இருந்த பெண் நடுவர் கிருத்திகா அவுட் வழங்கினார். இதனால் அதிருப்தி அடைந்த அஸ்வின் நடுவர் கிருத்திகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
யார்க்ஷயர் கவுண்டியில் கெய்க்வாட்
இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட். ஐ.பி.எல். தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் சி.எஸ்.கே. ரசிகர்கள் மத்தியில் இவருக்கென்று தனி பட்டாளம் உண்டு. இருப்பினும் காயம் காரணமாக இந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சில லீக் போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் விலகினார்.
தற்போது காயம் சரியான நிலையில் இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ள அவருக்கு 2 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது அவருக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. கவுண்டி கிரிக்கெட்டில் யார்க்ஷயர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிக்கோலஸ் பூரன் ஓய்வு அறிவிப்பு
அதிரடி ஆட்டக்காரனான நிக்கோலஸ் பூரன் ஐ.பி.எல். உள்ளிட்ட பல்வேறு லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். இந்தாண்டு நடந்த முடிந்த ஐ.பி.எல். தொடரில் அதிக சிக்சர்கள் அடுத்தவர்களின் பட்டியலில் அவர் தான் முதலிடத்தில் இருந்தார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 29 வயதான வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றநிலையில் ஐ.பி.எல்.உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்களில் பூரன் முழுவதுமாக கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது
தோனி குறித்து ரவி சாஸ்திரி
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமைக்குரியவர் மகேந்திரசிங் தோனி. இவரது சாதனைகளை கவுரவிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் சேர்த்து கவுரவித்துள்ளது. இதற்கு பல முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துகளை தோனிக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி தனது வாழ்த்துகளை வித்தியாசமாக கூறியுள்ளார்.
இது குறித்து ரவி சாஸ்திரி பேசியது பின்வருமாறு:- "அவருக்கு (தோனி) ஒரு பிக்பாக்கெட் திருடனை விட வேகமான கைகள் உள்ளன. அந்த அளவுக்கு வேகமான கைகளை தோனி ஸ்டம்பிங் செய்வதில் கொண்டுள்ளார். அவர் டக் அவுட் ஆனாலும் சரி உலகக்கோப்பையை வென்றாலும் சரி அப்படியே இருப்பார். சதத்தை அடித்தாலும் அதே போலவே இருப்பார். இரட்டை சதத்தை அடித்தாலும் அப்படியே இருப்பார். அவரிடம் பெரியளவில் எந்த மாற்றமும் இருக்காது" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மதுராந்தகத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: ஒரேமேடையில் பங்கேற்ற தே.ஜ. கூட்டணி தலைவர்கள்
23 Jan 2026செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நேற்ரு நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிகளை சேர்ந்த தலைவர்கள் ஒரேமேடையில் பங்கேற்றனர்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பில் கேட்க வேண்டிய 33 கேள்விகள் மத்திய அரசு வெளியீடு
23 Jan 2026டெல்லி, மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது குடிமக்களிடம் கேட்க வேண்டிய 33 கேள்விகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
-
மதுராந்தகம் வந்த பிரதமர் மோடி: இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உற்சாக வரவேற்பு
23 Jan 2026செங்கல்பட்டு, மதுராந்தகம் வந்த பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
-
அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா..? செங்கோட்டையன் பதில்
23 Jan 2026சென்னை, பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா என்பது குறித்து செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
-
டி.டி.வி. தினகரனுடன் கை குலுக்கிய இ.பி.எஸ்.
23 Jan 2026செங்கல்பட்டு, தேசிய ஜனநாயக பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரனுடன் கை குலுக்கிய எடப்பாடி பழனிசாமி கை குலுக்கிக் கொண்டனர்.
-
7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
23 Jan 2026சென்னை, சென்னை உட்பட 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான தோ்வெண்ணுடன் கூடிய பெயா் பட்டியல் வெளியீடு
23 Jan 2026சென்னை, தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள பள்ளி மாணவா்களுக்கு தோ்வு எண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியலை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
-
குஜராத் போல கேரளத்திலும் பா.ஜ.க. ஆட்சி: பிரதமர் மோடி
23 Jan 2026திருவனந்தபுரம், குஜராத்தை போல கேரளத்திலும் பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
நானும், டி.டி.வி. தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள் எடப்பாடி பழனிசாமி பேட்டி
23 Jan 2026சென்னை, நானும் டி.டி.வி. தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஜனநாயகன் பட வழக்கில் வருகிற 27-ம் தேதி தீர்ப்பு
23 Jan 2026சென்னை, ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் வரும் செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
-
நாகாலாந்தில் நிலநடுக்கம்
23 Jan 2026நாகலாந்த், நாகாலாந்தில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.0-ஆக பதிவாகியுள்ளது.
-
வடக்கில் சரிசெய்துவிட்டு பிரதமர் தெற்கே வரட்டும்: காங்கிரஸ் கட்சி விமர்சனம்
23 Jan 2026திருவனந்தபுரம், வட மாநிலங்களில் உள்ள பிரச்னைகளைத் தீர்த்துவிட்டு, தென் மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கட்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
-
மின் பேருந்துகள் லாபத்தில் இயங்குகின்றன - அமைச்சர்
23 Jan 2026சென்னை, மின்சார பேருந்துகள் லாபகரமாக ஓடுகிறது என சட்டசபையில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
-
தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பதிவு
23 Jan 2026புதுடெல்லி, தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருக்கிறது என்றும் தி.மு.க அரசுக்கு விடை கொடுக்க தமிழக மக்கள் முடிவு செய்துள்ளனர் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்..? மாணிக்கராஜா விளக்கம்
23 Jan 2026சென்னை, அ.ம.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தது குறித்து மாணிக்கராஜா விளக்கம் அளித்துள்ளார்.
-
ஜம்மு-காஷ்மீரில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம்
23 Jan 2026சென்னை, ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
இன்று ம.நீ.ம.செயற்குழு கூட்டம்
23 Jan 2026சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
தேர்தல் சீசனில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, பா.ஜ.க. கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
23 Jan 2026சென்னை, தேர்தல் சீசனில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, பா.ஜ.க.
-
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மகாத்மா காந்தி பெயரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர வேண்டும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்
23 Jan 2026சென்னை, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மகாத்மா காந்தி பெயரில் தொடர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட
-
இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல்
23 Jan 2026புதுடெல்லி, இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் டெல்லி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது.
-
திருவனந்தபுரம் - தாம்பரம் உள்பட 3 அம்ருத் பாரத் ரயில்களை துவக்கி வைத்தார் பிரதமர்
23 Jan 2026திருவனந்தபுரம், திருவனந்தபுரம் சென்டிரல் ரயில் நிலையத்தில் நேற்று காலை நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, திருவனந்தபுரம்- தாம்பரம் அம்ரித் பாரத் அறிம
-
திருவண்ணாமலையில் புதிய விமான நிலையம் அமையுமா? அமைச்சர் சிவசங்கர் பதில்
23 Jan 2026சென்னை, திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார்.
-
3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ வளாகத்தில் பூங்கா: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
23 Jan 2026சென்னை, ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் மெட்ரோஸ் பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –25-01-2026
24 Jan 2026


