முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை மறுநாள் வெளியாகும் கண்ணப்பா

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      சினிமா
Kannappa 2025-06-24

Source: provided

பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படம் கண்ணப்பா. நாளை மறுநாள் வெள்ளியன்று உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சரத்குமார், நியூசிலாந்து நாட்டில் ஒரு பெரிய செட் அமைத்து கண்ணப்பா படம் பிரமாண்டாக உருவாக்கப்பட்டதாக கூறினார். படத்தின் எடிட்டர் ஆண்டனி பேசுகையில், சுமார் 3 மணி நேரம் ஒடக்கூடிய படமாக இப்படம் இருந்தாலும், எவ்வித சலிப்பும் ஏற்படாத வண்ணம் படம் எடிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இப்படத்தில் நடித்துள்ள சம்பத்ராம் பேசுகையில், நாயகன் விஷ்ணு இந்த படத்தின் மூலம் ஒரு நடிகராக மட்டும் இன்றி கதையாசிரியராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார், அவர் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி. இயக்குநர் முகேஷ் குமார் சிங்கிற்கு என் வாழ்த்துகள் என்றார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஷெல்டன், ஹாலிவுட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவரும் இவர் அமெரிக்காவில் இருந்து வந்து இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து