முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை: இந்திய ராணுவம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்ய முடிவு

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      இந்தியா
INDIA 2025-03-11

Source: provided

புதுடில்லி : இந்திய ராணுவத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை அதிகரிக்க, ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் அவசரகால கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பிறகு ஆயுதம் கொள்முதலில் பாதுகாப்பு துறை கவனம் செலுத்தி வருகிறது. வானில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ட்ரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை அதிகரிக்க, அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ், ரூ.1,981 கோடியில் ஆயுதம் கொள்முதல் செய்ய, 13 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமா,க ரூ.2,000 கோடியில் ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

தற்போது வாங்கப்பட்ட ஆயுதங்கள் விவரம் பின்வருமாறு: எதிரி ட்ரோன்களை துல்லியமாக அழிக்கும் ஆயுதங்கள், குறைந்த அளவிலான இலகுரக ரேடார்கள், மிக குறுகிய இடத்தில் துல்லியமாக தாக்கும் ஏவுகணைகள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், இரவிலும் பார்வையிடும் திறன் கொண்ட கருவிகள், வெடிமருந்துகள் மற்றும் பல்வேறு வகையான ட்ரோன்கள் வாங்கப்பட உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து