முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம்: இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      உலகம்
Trump-2025-02-19

Source: provided

கத்தார், : இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது என்று தெரிவித்த அதிபர் டிரம்ப் இரு நாடுகளும் போர் ஒப்பந்தத்தை மீற வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கத்தாரும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது. அமெரிக்காவின் தலையீடு நிலைமையை மேலும் மோசமாக்கியது. இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து, இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முதலில் போர் நிறுத்தம் இல்லை என்று கூறிய ஈரான் தற்போது போர் நிறுத்தத்தை அறிவித்தது. இந்நிலையில், இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், " போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இரு நாடுகளும் போர் ஒப்பந்தத்தை மீற வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து