முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளி நிலையத்திற்கு பயணிக்க ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் தேர்வு

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      இந்தியா
Anthira 2025-06-24

Source: provided

திருப்பதி : அமெரிக்காவை தளமாக கொண்ட டைட்டனின் ஆர்ப்பிட்டல் போர்ட் விண்வெளி நிலையத்திற்கு பயணிக்க ஜாஹ்ன்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.;

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகொல்லுவை சேர்ந்தவர் டாங்கெட்டி ஜாஹ்ன்வி. விண்வெளி வீரரான இவர் 2029-ம் ஆண்டு விண்வெளிக்கு பயணிக்க உள்ளார். மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் பட்டதாரியான ஜாஹன்வி, நாசாவின் மதிப்புமிக்க சர்வதேச வான் மற்றும் விண்வெளித்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அமெரிக்காவை தளமாக கொண்ட டைட்டனின் ஆர்ப்பிட்டல் போர்ட் விண்வெளி நிலையத்திற்கு பயணிக்க ஜாஹ்ன்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த திட்டம் அடுத்த 4 ஆண்டுகளில் தொடங்கப்பட உள்ளது. ஜாஹ்னவின் பெற்றோர் ஸ்ரீனிவாஸ் மற்றும் பத்மஸ்ரீ தற்போது வேலைக்காக குவைத்தில் வசித்து வருகின்றனர். விண்வெளி ஆர்வலரான ஜாஹ்ன்வி தனது இடைநிலை கல்வியை தனது சொந்த ஊரான பால கொல்லுவில் முடித்தார். பிறகு பஞ்சாப்பில் உள்ள லவ்லி புரபஷினல் பல்கலைக்கழகத்தில் இளங்களை படிப்பை படித்தார்.

ஜாஹ்ன்வி கல்வி மற்றும் விண்வெளித்துறையில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டார். அவர் இஸ்ரோவின் கல்வி திட்டங்களுக்காக உரைகளை நிகழ்த்தி உள்ளார்.  ஜாஹ்ன்வி இளைய வெளிநாட்டு அனலாக் விண்வெளி வீராங்கனை மற்றும் வின்வெளி ஐஸ்லாந்தின் புவியியல் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் ஆவார். ஜாஹ்ன்வி நாசா விண்வெளி ஆப்ஸ் சவாலில் மக்கள் தேர்வு விருது மற்றும் இஸ்ரோ உலக விண்வெளி வார இளம் சாதனையாளர் விருதுகள் பெற்றுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து