முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு டெஸ்டில் அதிக ரன்கள்: சங்ககாரா சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      விளையாட்டு
Rishabh-Pant 2023-12-12

Source: provided

லீட்ஸ் : ஒரு டெஸ்ட்டில் அதிக ரன்கள் குவித்த ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சங்ககாராவின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்தார். 

முதல் டெஸ்ட்... 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 

ரிஷப் பண்ட் 2 சதம்...

தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர். இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடியது.

சாதனை முறியடிப்பு...

இப்போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்திய ரிஷப் பண்ட், ஒரு டெஸ்ட்டில் அதிக ரன்கள் குவித்த ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சங்ககாராவின் சாதனையையும் முறியடித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சங்ககாரா 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 244 ரன்கள் அடித்திருந்தார். அந்த சாதனையை இப்போட்டியில் 252 ரன்கள் அடித்து பண்ட் முறியடித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து