முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகள் தரவரிசை: முதல் முறையாக டாப் 100-ல் இந்தியா

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      இந்தியா
India 2023-09-17

Source: provided

புதுடெல்லி : ஐ.நா.வின் உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகள்  தரவரிசையில் இந்தியா முதல்முறையாக முதல் 100 இடங்களுக்குள் நுழைந்துள்ளது.

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கவனம் கொடுக்க வேண்டிய அம்சங்கள் மற்றும் அதற்கான நிலையான வளர்ச்சி இலக்குகளை ஐநா வரையறுத்துள்ளது. அதில் ஆண்டுதோறும் ஏற்படும் முன்னேற்றங்களுக்கு ஏற்ப நாடுகளை அது தரவரிசைப்படுத்துகிறது. அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகள் தரவரிசையை ஐநா நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, 193 நாடுகள் கொண்ட பட்டியலில் முதல்முறையாக இந்தியா 67 புள்ளிகளுடன் 99-வது இடத்தைப் பிடித்துள்ளது. 87 புள்ளிகளுடன் ஃபின்லாந்து முதலிடத்திலும், 85.7 புள்ளிகளுடன் ஸ்வீடன் 2-வது இடத்திலும், 85.3 புள்ளிகளுடன் டென்மார்க் 3-வது இடத்திலும் உள்ளன.

ஜெர்மனி 4-வது இடத்திலும், பிரான்ஸ் 5-வது இடத்திலும், ஆஸ்ட்ரியா 6-வது இடத்திலும், நார்வே 7-வது இடத்திலும், குரோஷியா 8-வது இடத்திலும், போலந்து 9-வது இடத்திலும், செக் குடியரசு 10-வது இடத்திலும் உள்ளன. முதல் 20 இடங்களில் 19 நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவையாக உள்ளன. ஜப்பான் 8.7 புள்ளிகளுடன் 19-வது இடத்தைப் பிடித்துள்ளது. சீனா 74.4 புள்ளிகளுடன் 49-வது இடத்திலும், அமெரிக்கா 75.2 புள்ளிகளுடன் 44-வது இடத்திலும் உள்ளன. பூட்டான் 70.5 புள்ளிகளுடன் 74-வது இடத்திலும், நேபாளம் 68.6 புள்ளிகளுடன் 85-வது இடத்திலும், வங்கதேசம் 63.9 புள்ளிகளுடன் 114-வது இடத்திலும், பாகிஸ்தான் 57 புள்ளிகளுடன் 140-வது இடத்திலும் உள்ளன. இந்தியாவின் கடல்சார் அண்டை நாடுகளான மாலத்தீவு 53வது இடத்திலும், இலங்கை 93வது இடத்திலும் உள்ளன.

புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்த அறிக்கையின் ஆசிரியர்கள், உலக அளவில் எஸ்.டி.ஜி. முன்னேற்றம் தேக்கமடைந்துள்ளதாகவும், 2015 ஆம் ஆண்டில் ஐ.நா. உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்ட 17 இலக்குகளில் 17 சதவீதம் மட்டுமே 2030 ஆம் ஆண்டுக்குள் அடையப்படும் என்றும் கணித்துள்ளனர். மோதல் போக்குகள், உட்கட்டமைப்பு வசதிகள் தாக்குதலின் எளிய இலக்காகுதல் மற்றும் திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதில் இருக்கும் நிதித் தட்டுப்பாடு ஆகியவை உலகின் பல பகுதிகளில் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன. என்று இந்த அறிக்கையின் முதன்மை ஆசிரியரான உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஜெப்ரி சாக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து