முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2026 தேர்தல் கண்டிப்பாக மாறுதலை தரும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : 2026 தேர்தல் கண்டிப்பாக மாறுதலைத் தரும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வேலூரில் 125 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட பென்லாண்ட் மருத்துவமனைக் கட்டட வளாகத்தில் புதிதாக 7 மாடிக் கட்டடத்தைக் கட்டி, அதற்கு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை என்று பெயரிட்டு அரைகுறையாகக் கட்டப்பட்ட கட்டடத்தை  முதல்வர்  மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை என்றால், அதில் இருதயவியல் துறை, நரம்பியல் துறை, சிறுநீரகவியல், முட நீக்கியல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளும், அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர மற்றும் விபத்து தொடர்பான தனி வார்டுகள் மற்றும் எக்ஸ்ரே அறைகள் உள்ளிட்டவை இடம்பெற வேண்டும். இப்படிப்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என்று சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட வேண்டும். வேலூரில்   திறக்கப்பட உள்ள சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் இதுபோன்ற துறைகள், கட்டங்கள் பெயரளவிற்கு உள்ளன. ஆனால், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர் பதவிகள் நிரப்பப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, சேலம், அம்மாபேட்டை,  திருநெல்வேலி, கிண்டி உள்ளிட்ட பல அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிசெய்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.  தி.மு.க. அரசு, ஆட்சிக்கு வந்தது முதல் இன்று வரை தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் கிடைப்பதில்லை என்று புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.  

இந்த நிர்வாகத் திறனற்ற ஆட்சியாளர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, புரட்சித் தலைவரின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. 'மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்' `ஒருநாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு, அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு!' 2026 தேர்தல் கண்டிப்பாக மாறுதலைத் தரும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து