முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வான்வெளியை பயன்படுத்த வரும் ஜூலை 24 வரை தடை நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      உலகம்
Pak 2023-10-18

Source: provided

புதுடெல்லி : பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை ஜூலை 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சுற்றுலா தலங்களில் ஒன்றான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள்  நடத்திய தாக்குதலில்  26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. அட்டாரி எல்லையில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி மூடல் மற்றும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்காலிக ரத்து என அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்திய வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாத வகையில் அவற்றை இந்தியா மூடியது.

 இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு அப்போது கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தது.

எனினும், இந்திய வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாத வகையில் அவற்றை ஏப்ரல் 23-ந்தேதி முதலில் இந்தியா மூடியது. சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் விதிகளின்படி, ஒரு மாதம் வரையே ஒரு நாடு தன்னுடைய வான்வெளியை மூட முடியும். இந்த சூழலில், பாகிஸ்தான் விமானங்களுக்கு எதிரான தடையை மே 23-ந்தேதி வரை முதலில் மத்திய அரசு நீட்டித்தது.

இதன்பின்னர் இந்த தடை ஜூன் 24-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்த தடை நேற்றுடன் முடிவடைய உள்ள சூழலில், ஜூலை 24-ந்தேதி வரையிலான ஒரு மாதத்திற்கு, இந்திய வான்வெளியை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த முடியாத வகையில் மத்திய அரசு தடையை நீட்டித்து அறிவித்து உள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து