முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா இன்று விண்வெளி பயணம்: நாசா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      உலகம்
Subhanshu-Shukla-2025-06-24

கேப் கெனவரல், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் இன்று (ஜூன் 25) விண்வெளி பயணம் மேற்கொள்கின்றனர். 

அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு செல்கிறார். அவருடன் 3 விண்வெளி வீரர்கள் செல்ல உள்ளனர்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது. கடைசியாக 19-ம் தேதி ராக்கெட் ஏவப்பட இருந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்தது.

இந்நிலையில், ஆக்சியம் 4 திட்டம் இன்று (ஜூன் 25) செயல்படுத்தப்படும் என நாசா அறிவித்துள்ளது. இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் இன்று (ஜூன் 25) விண்வெளி பயணம் மேற்கொள்கின்றனர். புளோரிடாவில் இருந்து பால்கன் 9 மூலம் டிராகன் விண்கலத்தில் நால்வரும் செல்கின்றனர் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து