முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வான்வெளி மூடல் எதிரொலி: டில்லி புறப்பட்ட விமானம் குவைத்தில் தரையிறக்கம்

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      உலகம்
Air-India 1

Source: provided

குவைத் : மத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டதால் 160 இந்தியர்களுடன் ஜோர்டான் நாட்டில் இருந்து டில்லி புறப்பட்ட விமானம் குவைத்தில் தரையிறக்கப்பட்டது.

குவைத்தில் தரையிறக்கப்பட்ட விமானம், நேற்று மதியம் 2.30 மணிக்கு டில்லிக்கு புறப்படும். ஆபரேஷன் சிந்து மூலம் ஈரானில் இருந்து இந்தியர்களை மத்திய அரசு தாயகம் அழைத்து வருகிறது. ஆபரேஷன் சிந்து நடவடிக்கை கீழ், மொத்தம் 604 இந்தியர்கள் இஸ்ரேலில் இருந்து ஜோர்டான் மற்றும் எகிப்து வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தனது அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீச்சு நடத்தியதற்கு பதிலடியாக ஈரானிய தாக்குதல்களைத் தொடர்ந்து, விமானம் குவைத்துக்குத் திருப்பி விடப்பட்டது. போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹானில் உள்ள ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதில் இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா எடுத்த முடிவைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகள் வான்வெளி மூடப்பட்டுள்ளது.

இதனால் ஜோர்டானில் இருந்து டில்லி புறப்பட்ட விமானம் குவைத்துக்கு திருப்பி விடப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். டில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், குவைத்தில் உள்ள தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து