முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம்: தானே நிறுத்தியதாக டிரம்ப் தம்பட்டம்

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      உலகம்
Trump 2023-04-13

டெஹ்ரான், இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக ஈரான் அறிவித்தது. இதை தொடர்ந்து இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அறிவித்தது. முன்னதாக, இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக, அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின. இந்த சூழலில், ''இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 6 மணி நேரத்திற்கு பிறகு ஈரானும், 12 மணி நேரத்திற்கு பிறகு இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும். 24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வரும்'' என அதிபர் டிரம்ப் அறிவித்தார். 

இதையடுத்து, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி கூறியதாவது: இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் அமலுக்கு வரவில்லை. போர் நிறுத்தம் தொடர்பாகவோ, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடர்கிறது. தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்த தயார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 இவ்வாறு கூறிய ஈரான், சில மணி நேரங்களில் இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பின்னர் இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அறிவித்தது. இரவு 7 மணி வரை போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று இஸ்ரேல் அறிவித்தது.

இஸ்ரேல் பிரதமருடன் அதிபர் டிரம்ப் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ள வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரான் நாட்டின் தலைவர்களுடன் கத்தார் நாட்டின் தலைவர்கள் நேரடியாக பேசி போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ள வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து