முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் வான்வெளி மூடல்; 11 விமான சேவை ரத்து

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      தமிழகம்
Air

Source: provided

சென்னை : இஸ்ரேல்- ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டதால் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நடந்து வருகிறது. இதனால், பஹ்ரைன், லெபனான், ஈராக், கத்தார் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவுதி அரேபியா, ஜோர்டான், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன. இதனால், தோஹா, அபுதாபி, குவைத், துபாய் நாடுகளுக்கு செல்லும் 6 விமானங்களும், அங்கிருந்து சென்னை வரும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

தாய்லாந்து நாட்டில் இருந்து தோஹா சென்ற 3 கத்தார் ஏர்லைன்ஸ் விமானங்கள் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் மறு உத்தரவு வரும் வரை அதன் விமான சேவையை ரத்து செய்துள்ளது. இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து, இன்று லண்டன், பஹ்ரைன், அபுதாபி செல்லும் விமானங்கள் அனைத்தும் தாமதமாக இயக்கப்படும். பயணிகள் தங்களது பயண நேரத்தை திட்டமிடுவதற்கு முன்பாக, விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து