முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கை மாற்ற பரிந்துரை

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      தமிழகம்
Thiruparamkundram temple

மதுரை, திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிப்பதற்காக, வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர்.

திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக வெவ்வேறு தரப்பினர் இடையே பிரச்னை எழுந்தது. இது குறித்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டது. ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் மலையின்  மீது சிலர்  ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். திருப்பரங்குன்றம் அப்துல் ஜாபர், 'தர்கா, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக சாலை, தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும், என மனு செய்தார்.

விழுப்புரம் செஞ்சி மேல்சித்தமூர் ஜினா காஞ்சி ஜெயின் மடம் ஸ்வஸ்தி ஸ்ரீலட்சுமிசேனா பட்டாரக் பட்டாச்சாரிய மகா சுவாமிகள், 'திருப்பரங்குன்றம் மலையில் சமணர்கள் வாழ்ந்ததற்கான கல்வெட்டுகள் உள்ளன. மலையை சமணர் குன்றாக அறிவிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்தார். 

இதை நீதிபதிகள் ஜெ .நிஷா பானு , எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. நீதிபதி நிஷா பானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறேன் என உத்தரவிட்டார். இதில் மாறுபட்ட நிலைப்பாட்டை நீதிபதி ஸ்ரீமதி எடுத்துள்ளார். இதனால் இந்த வழக்கு விசாரணை கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரணைக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து