முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்ஸ் முன்னாள் அதிபர் விடுதலை

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2025      உலகம்
court 2024-12-30

Source: provided

பாரிஸ்: பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

2007ம் ஆண்டு முதல் 2012 வரை பிரான்சின் அதிபராக செயல்பட்டவர் நிகோலஸ் சர்கோஸி (வயது 70). இவர் அதிபர் தேர்தல் பிரசாரத்திற்காக லிபியா முன்னாள் அதிபர் கடாபியிடம் நிதி உதவி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு பாரிஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 3 மாதங்களுக்குமுன் தீர்ப்பு வெளியானது. அதில், நிகோலஸ் சார்கோஸி குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது.

5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நிகோலஸ் சர்கோஸி கடந்த மாதம் 21ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பாரிசில் உள்ள லா சாண்டி சிறையில் அடைக்கப்பட்டார். அதேவேளை, தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து , ஜாமீன் வழங்கக்கோரி நிகோலஸ் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மேல்முறையீட்டு மனு பாரிஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நிகோலஸ் சர்கோஸிக்கு பாரிஸ் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 3 வாரங்கள் லா சாண்டி சிறையில் இருந்த நிகோலஸ் கடந்த 3 தினங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான உடன் அவர் வீடு திரும்பினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து